திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களிடம் தொடர் திருட்டு: ஒரு மாதத்திற்குப் பின்பு பெண்கள் சிக்கியது எப்படி?

திருச்செந்தூர் முருகன் கோயில்
திருச்செந்தூர் முருகன் கோயில்திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களிடம் தொடர் திருட்டு: ஒரு மாதத்திற்குப் பின்பு பெண்கள் சிக்கியது எப்படி?

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர்ந்து பக்தர்களிடம் கைவரிசைக் காட்டி வந்த இரு பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

திருச்செந்தூர் முருகன் கோயில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்று. அதனால் அங்கு எப்போதுமே கூட்டம் அதிகளவில் களைகட்டும். இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி பக்தர்கள் மத்தியில் சிலர் தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். அந்தவகையில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குத் தரிசனம் வந்துவிட்டு கடந்த மாதத்தில் மட்டும் மூன்றுபேர் நகைகளைப் பறிகொடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் கோயிலில் நகைபறிப்புச் சம்பவங்களில் ஈடுபடுவோரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் திருச்செந்தூர் கோயில் முழுவதும் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் ஆய்வு செய்தனர். அதன்படி அதில் பதிவாகி இருந்த முகங்களோடு, ஏற்கெனவே திருட்டு வழக்குகளில் தொடர்புடைய முகங்களைப் பொருத்திப் பார்த்து சோதனை செய்தனர். அதன்பேரில், நெல்லை பால பாக்கியாநகரைச் சேர்ந்த பேச்சியம்மாள்(60), திருநெல்வேலி குமரேசன் காலணியைச் சேர்ந்த கல்யாணி என்ற கலா(49) ஆகியோர்தான் எனத் தெரியவந்தது. அவர்களைக் கைது செய்த போலீஸார் திருடிய நகைகளை விற்றுவைத்திருந்த 1,70,000 ரொக்கப்பணம், மேலும் 5 பவுன் திருட்டு நகைகளையும் மீட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in