சீரியலில் மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் நடிகை ரோஷினி?

ரோஷினி
ரோஷினி

’பாரதி கண்ணம்மா’ புகழ் ரோஷினி மீண்டும் சீரியலுக்குள் நுழைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரோஷினி. இந்த சீரியலில் இவரது கதாபத்திரமான கண்ணம்மா ரசிகர்களிடையே பிரபலமான ஒன்று. விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த சீரியல் ஆரம்பத்தில் வரவேற்பைப் பெற்ற அதே சமயம், அதன் கதையமைப்பிற்காக சமூக வலைதளங்களில் மீம் மூலமாக கேலிக்குள்ளாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சீரியல் மூலம் நல்ல புகழ் வெளிச்சத்தில் இருந்த போதே இந்த சீரியலை விட்டு விலகினார் ரோஷினி. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் மட்டுமே இந்த சீரியலை விட்டு விலக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சீரியலில் எட்டு வயதுடைய குழந்தைகளுக்கு இவர் அம்மா என்ற ஒரு விஷயமும் சினிமாவிற்கான வாய்ப்புகளுத் தடையாக இருக்கும் என்று சொல்லியும் அவர் இந்த சீரியலை விட்டு விலகினார். ஆனால், விலகிய சில வாரங்களிலேயே விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி 3’ சமையல் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார்.

இந்த மூன்றாவது சீசன் முடிந்து பல வாரங்களாகியுள்ள நிலையில் மீண்டும் சீரியலில் ரோஷினி ரீ எண்ட்ரி கொடுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகிள்ளது. ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் இவர் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்தத் தகவல்களை ரோஷினி மறுத்துள்ளார். சினிமா மற்றும் வெப் சீரிஸில் நடிப்பதற்குத் தற்போது அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் சொல்லி இருக்கிறார் ரோஷினி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in