திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் சீனியர் சிட்டிசனுக்கு தனிவரிசை: வள்ளிகுகையில் தரிசிக்க கட்டணம் ரத்து!

திருச்செந்தூர்
திருச்செந்தூர் படம்: என்.ராஜேஷ்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் முதியோர்களுக்கு பிரத்யேக சிறப்பு வரிசை இன்று முதல் அமலுக்கு வந்தது.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் எப்போதுமே பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்தக் கோயிலில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தும்வகையில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சாமியை தரிசிக்க இலவச தரிசனம், 100 ரூபாய் கட்டணப் பாதை என இருவழியில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்றுமுதல் மூத்த குடிமக்கள் தரிசனத்திற்கு செல்லும்வகையில் தனியாக தரிசன பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரிசன பாதையில் முதியோர் அமர்ந்து செல்லும்வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இன்று இதை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.

இந்தப் பாதையில் தரிசனம் செய்யச் செல்லும் முதியோர், தங்கள் வயதைக் காட்டும்வகையில் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டலாம். இதேபோல் மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றி சக்கர நாற்காலியில் சாமி தரிசனம் செய்யும் இலவச வரிசையும் பிரத்யேகமாகத் திறக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இதுவரை திருச்செந்தூர் கோயிலில் நாழிக்கிணற்றில் நீராடவும், வள்ளிகுகையில் தரிசிக்கவும் ஒருரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதுவும் இன்றுமுதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in