திரிபுரா காங்கிரஸ் மூத்த தலைவர் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்!

திரிபுரா காங்கிரஸ் மூத்த தலைவர் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்!

திரிபுரா காங்கிரஸ் மூத்த தலைவர் பிஜூஷ் காந்தி பிஸ்வாஸ் உட்பட பல முன்னாள் காங்கிரஸ் நிர்வாகிகள் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனர்.

திரிபுரா காங்கிரஸ் மூத்த தலைவர் பிஜூஷ் காந்தி பிஸ்வாஸ், டெல்லியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.

திரிபுராவில் டிஎம்சியின் மாநிலத் தலைவராக பிஸ்வாஸ் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திரிபுரா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர்கள் தேஜென் தாஸ் மற்றும் அனந்த பானர்ஜி, மாநில காங்கிரஸின் முன்னாள் செயல் தலைவர் பூர்ணிதா சக்மா மற்றும் திரிபுரா இளைஞர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் சமரேந்திர கோஷ் ஆகியோரும் நேற்று திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனர்.

மூத்த தலைவர்களை கட்சிக்கு வரவேற்று பேசிய மம்தா பானர்ஜி, “ திரிபுராவில் எங்கள் குடும்பம் வலுவடைகிறது. திரிபுராவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் நோக்கத்துடன், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் பிஜூஷ் காந்தி பிஸ்வாஸ் இன்று எங்கள் குடும்பத்தில் இணைந்தார். அவரை எங்கள் கட்சிக்கு நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம்” என்றார். அபிஷேக் பானர்ஜி பேசுகையில், “திரிபுராவில் நடக்கும் பாஜகவின் தவறான ஆட்சிக்கும், மாநிலத்தில் காவி சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பயங்கரவாதத்துக்கும் எதிராக நாம் ஒன்றிணைந்து போராடுவோம்” என்று கூறினார். 60 உறுப்பினர்களைக் கொண்ட திரிபுரா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in