6ம் வகுப்பு மாணவர்களைத் தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள்: மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

தாக்குதல்
தாக்குதல்6ம் வகுப்பு மாணவர்களைத் தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள்: மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

சத்தீஸ்கரின் கவர்தாவில் பள்ளி மாணவர்கள் சிலரை மற்ற சில மாணவர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இது குறித்து விசாரணை நடத்த கபீர்தாம் மாவட்ட ஆட்சியர் ஜான்மேஜய் மஹோபே உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய கபீர்தாம் மாவட்ட ஆட்சியர் ஜான்மேஜய் மஹோபா, "இது மார்ச் 11ம் தேதி நடந்தது. அந்த வீடியோவில், 11ம் வகுப்பு மாணவர்கள் 6 ம் வகுப்பு குழந்தைகளை தாக்குவதும், தவறாக நடந்து கொள்வதும் கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் எங்கள் கவனத்திற்கு வந்தவுடன், ஒரு குழு உடனடியாக பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியது.

முதல்நிலை விசாரணையில் விடுதி கண்காணிப்பாளரின் அலட்சியம் கண்டறியப்பட்டதால், அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். பள்ளி முதல்வரை பதவியில் இருந்து நீக்குவதற்கான பரிந்துரை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களை சிறார்களாகக் கருதி சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in