பட்ஜெட் தாக்கல்: அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு உயர்வு!

முதியோர்
முதியோர்

2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் ‘அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்வு’ வரவேற்புக்குரியதாக பார்க்கப்படுகிறது.

பணி ஓய்வு பெறுவோர் மற்றும் சீனியர் சிட்டிசன்ஸ் வரம்புக்குள் உட்படும் முதியோர் பலரும் தங்களது வாழ் நாளை சேமிப்பை அஞ்சலகம் மற்றும் வங்கிகளிலேயே முதலீடு செய்ய விரும்புவார்கள். ஒப்பீட்டளவில் வங்கிகளைவிட அஞ்சலகங்கள் சற்றே கூடுதல் வட்டி தருவதால், அஞ்சலகங்களை அதிகமான முதியோர் நாடுகின்றனர்.

பணி ஓய்வின்போது கிடைக்கும் பல லட்சம் பணிக்கொடை மற்றும் இதர ஓய்வூதிய பலன்களை அஞ்சலகங்களில் சேமிக்க விரும்புகின்றனர். இவற்றிலிருந்து கிடைக்கும் வட்டி மற்றும் மாதாந்திர ஓய்வூதியங்களை கொண்டே அந்திமத்தை எதிர்கொள்ள முதியோர் விரும்புகின்றனர். ஆனால் அஞ்சலகங்களில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு அதிகபட்சமாக ரூ.15 லட்சமாக இருந்ததில், இதர உபாயங்களை நாட வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் ஆளானார்கள்.

தற்போது அந்த வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்வு கண்டது வரவேற்புக்குரிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பணி ஓய்வு பெறுவோர் தங்களது பெரும்பாலான ஓய்வூதிய பண பலன்களை அஞ்சலகம் வாயிலாகவே சேமிக்க வாய்ப்பாகிறது. இந்த வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு வரவேற்பு பெற்றுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in