போக்குவரத்து விதிமீறலை வீடியோ, போட்டோ எடுத்து அனுப்புங்க: சென்னை மக்களுக்கு வாட்ஸ் அப் எண் தந்தது போலீஸ்

போக்குவரத்து விதிமீறலை  வீடியோ, போட்டோ எடுத்து அனுப்புங்க: சென்னை மக்களுக்கு வாட்ஸ் அப் எண் தந்தது போலீஸ்

சென்னையில் விதிமீறல் மேற்கொள்ளும் வாகனங்களை பொதுமக்கள் கண்டறிந்தால், அவற்றை போட்டோ அல்லது வீடியோவாக படம் பிடித்து, வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அன்றாடம் பெருகும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக விபத்தும் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக நெடுஞ்சாலை, மேம்பாலங்கள், மெட்ரோ பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனாலும், பொதுமக்கள் சாலை விதிகளைக் கடைபிடிப்பதில் அலட்சியம் தொடர்கிறது. இதனால் அன்றாடம் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால் அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் அன்றாடம் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து விதிகளை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி காவல் துறை விளம்பரம் செய்வதுடன், நேரடி நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. தற்போது சென்னையில் சாலைவிதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அபராதமும் விதித்து வருகிறது. இந்த நிலையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் சாலை விதிகளை மீறும் வாகனங்களைக் கண்டால் அவற்றை பொதுமக்கள் போட்டோ அல்லது வீடியோ எடுத்து 90031 30103 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பலாம் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்த முயற்சிக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in