நிறுத்தி வைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவு இன்று வெளியீடு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவு இன்று வெளியீடு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒருசில கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைகழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. விடைத்தாள் திருத்துவது மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துவது தொடர்பாக 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்திருந்தது. 

இதனையடுத்து அந்த 20 கல்லூரிகளின் நிர்வாகிகளும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு பேராசிரியர்களை அனுப்புவதாகவும், 9 கல்லூரிகள் கணக்கை ஒப்படைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனை ஏற்றுக் கொண்ட அண்ணா பல்கலைக்கழகம் 20க்கும் மேற்பட்ட கல்லூரியில் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in