
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றிற்கு ஒரே நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.
கொரோனா காலகட்டத்தில் தேர்வுகள் நடத்த பெரும் சிரமம் ஏற்பட்ட நிலையில், தற்போது அந்த நிலை மாறி முறையாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் மே மாத செமஸ்டர் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மே 26-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தேர்வு தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக, மே 15-ம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ளன. அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆக.7-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம்ம அறிவித்துள்ளது.