ஒரு பொட்டலம் ஓபியம் 3500 ரூபாய்க்கு விற்பனை: சென்னையில் ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது

ஒரு பொட்டலம் ஓபியம் 3500 ரூபாய்க்கு விற்பனை: சென்னையில்  ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது

சென்னையில் ஓபியம் போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவல்லிக்கேணி சாமி தெருவில் உள்ள வீடு ஒன்றில் சோதனையிட்ட போது 600 கிராம் ஓபியம் என்னும் பேஸ்ட் வடிவிலான போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்துடன் அதனை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த திருவல்லிக்கேணி சாமி தெருவைச் சேர்ந்த சோகன் லால்(58) மற்றும் சுரேஷ்குமார்(38) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் ராஜஸ்தானைச் சேர்ந்தர்கள் என்பதும் சோகன்லால் பான் ஷாப் கடையும், சுரேஷ் குமார் கவரிங் நகை விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. மேலுல் சோகன்லால் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஓபியம் போதைப்பொருள் செடியை ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்குக் கொண்டு வந்து, அதை வீட்டிலேயே அறைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக ஓபியம் போதைப்பொருளை ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட சில மார்வாடிகளின் திருமண நிகழ்ச்சிகளில் ஒரு பொட்டலம் 3000 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஓபியம் போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீஸார், பின்னர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in