
கோவையில் 2 லட்சம் மதிப்புள்ள 4.5 கிலோ கஞ்சா சிக்கியது. ஒடிசா இளைஞரை கோவை மாவட்ட காவல்துறையினர் துரத்தி சென்று கைது செய்தனர்.
கோவை கருமத்தம்பட்டி பகுதியில் இன்று சரவணபவன் ஹோட்டல் அருகில் கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணிநந்தர் மகாநந்தா (32) என்பவரை போலீஸார் துரத்திச் சென்று கைது செய்தனர். அவரிடமிருந்து 2 லட்சம் மதிப்புள்ள 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.