சென்னை பீடா கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை: வடமாநில வாலிபர் கைது

சுரேந்திரா யாதவ்.
சுரேந்திரா யாதவ்.

சென்னையில் பீடா கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஜாம்பஜார் பகுதியில் போதை சாக்லேட் (கஞ்சா) விற்பனை செய்யப்படுவதாக தி.நகர் உதவி ஆணையரின் தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட்.

அப்போது ஜாம்பஜார் மீரான் சாகிப் தெருவில் பீடா கடை ஒன்றில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டுபிடித்தனர். அங்கு சென்று போலீஸார் சோதனை செய்து போதை சாக்லேட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடையில் இருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்த 7 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளைப் போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, விசாரணையில் போதை சாக்லேட் விற்பனை செய்தவர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்திரா யாதவ்(41) என்பதும் பீடா கடை நடத்துவது போல மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இவர் யாரிடம் கஞ்சா சாக்லேட் வாங்கினார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in