பேருந்து நிலையத்தில் கஞ்சா சாக்லேட் விற்பனை: வாலிபரை கைது செய்தது போலீஸ்

பேருந்து நிலையத்தில் கஞ்சா சாக்லேட் விற்பனை: வாலிபரை கைது செய்தது போலீஸ்

கோவையில் 1.600 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை சுல்தான்பேட்டை சித்தநாயக்கன் பாளையம் பகுதியில் இன்று போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் மற்றும் காவல்துறையினர் சித்தநாயக்கன் பாளையம் பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்த சூலூர் பகுதியை சேர்ந்த பப்ளு குமாரை (36) காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 1.600 கிலோ கிராம் எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in