பாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆப்பிரிக்க குரங்கு குட்டிகள்: சென்னை விமானநிலையத்தில் சிக்கின

மார்மோஸ் வகை குரங்கு குட்டி.
மார்மோஸ் வகை குரங்கு குட்டி.பாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆப்பிரிக்க குரங்கு குட்டிகள்: சென்னை விமானநிலையத்தில் சிக்கின

சென்னை விமான நிலையத்தில் பாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை குரங்கு குட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பாங்காஙகில் இருந்து வந்த பயணி முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அப்போது அவர் கொண்டு வந்த பையில் அசைவு தெரிந்தது. அந்த பையை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது அதில், அரியவகை ஆப்பிரிக்கா வனம் மற்றும் அட்லாண்டிக் கடற்கரை பகுதியில் வசிக்கும் 4 குரங்கு குட்டிகள் இருப்பது தெரிய வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட குரங்கு குட்டி.
பறிமுதல் செய்யப்பட்ட குரங்கு குட்டி.பாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆப்பிரிக்க குரங்கு குட்டிகள்: சென்னை விமானநிலையத்தில் சிக்கின

இது தொடர்பாக அரிய விலங்குகளை விதிமுறைப்படி நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான எந்த ஆவணங்களும் பயணியிடம் இல்லாதது உறுதியானது. குறிப்பாக மற்ற நாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையிடமும், இந்திய வனவிலங்கு துறையிடமும் தடையில்லா சான்றிதழ் அனுமதி பெற்றதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும்.

இது போன்ற எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் நான்கு குரங்கு குட்டிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை சென்னை வன உயிரினங்கள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in