
கொழும்புவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.69.61 லட்சம் மதிப்பிலான 1387 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கொழும்புவில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் கொழும்பில் இருந்து சென்னை வந்த பயணியை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெண் பயணி ஒருவர் 572 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கத்தை தனது உடலில் மறைத்து வைத்துள்ளதைக் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.28.70 லட்சம் பயணியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல கொழும்புவில் இருந்து மற்றொரு விமானத்தில் சென்னைக்கு வந்த பெண் பயணியை சோதனைச் செய்தனர். அவரிடம் இருந்து ரூ.40.90 லட்சம் மதிப்பிலான 815 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நாளில் வெவ்வேறு பயணிகளிடம் இருந்து ரூ.69.61 லட்சம் மதிப்பிலான 1387 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.