தண்ணீர் லாரியில் ரேசன் அரிசி: சோதனையில் அதிர்ந்த அதிகாரிகள்

தண்ணீர் லாரியில் ரேசன் அரிசி: சோதனையில் அதிர்ந்த அதிகாரிகள்

மாவு மில் ஒன்றில் குடிதண்ணீர் வினியோகம் செய்யும் தண்ணீர் டேங்கர் நின்றது. இதில் தண்ணீருக்குப் பதிலாக ரேசன் அரிசியை மறைத்துவைத்திருந்து, அதை மாவாக அரைத்து வினியோகம் செய்ய முயன்ற போது, அதிகாரிகள் அதிரடி ஆய்வுசெய்து ரேசன் அரிசியைக் கைப்பற்றினர்.

வத்தலக்குண்டு-உசிலம்பட்டி சாலையில் தனியார் மாவுமில் ஒன்று உள்ளது. இங்கு ரேசன் அரிசியை பதுக்கி வைத்து, அதை மாவாக அரைத்து மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ள சில உணவகங்களுக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வட்ட வழங்கல் அலுவலர் பாலகுமாரன், காவல்துணைக் கண்காணிப்பாளர் நல்லு தலைமையிலான அதிகாரிகள் ரைஸ் மில்லில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த ரைஸ் மில்லில் 15 மூடை ரேசன் அரிசி இருந்தது. அந்த மாவு மில்லில் ஒரு தண்ணீர் டேங்கர் லாரியும் நின்றது. மாவு மில்லில் எதற்காக தண்ணீர் டேங்கர் லாரி என அதிகாரிகள் அதனை சோதனை செய்தனர். அப்போது அதில் தண்ணீருக்குப் பதிலாக ரேசன் அரிசி மூடைகள் இருந்தது தெரியவந்தது. அந்த மாவு மில்லில் இருந்து 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதைத் தெரிந்து மாவு மில் உரிமையாளர் கலா(60), அவரது மகன் பிரசாத்(25) ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.

தண்ணீர் டேங்கரில் நூதன முறையில் ரேசன் அரிசி பதுக்கிவைத்திருந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in