3 பழங்கால உலோக சிலையின் விலை 1.80 கோடி: வாடிக்கையாளர் போல் சென்று போலீஸ் அதிரடி

3 பழங்கால உலோக சிலையின் விலை 1.80 கோடி: வாடிக்கையாளர் போல் சென்று போலீஸ் அதிரடி

3 பழங்கால உலோக சிலையை 1.80 கோடிக்கு ரூபாய்க்கு விற்க முயன்ற இருவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து சிலைகளை பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவர் பழைமையான இரண்டு ஸ்ரீதேவி சிலை, ஒரு கருப்பசாமி உலோக சிலை என 3 சிலைகளை 60 லட்சம் ரூபாய் வீதம் 1.80 கோடிக்கு விற்பனை செய்ய வாடிக்கையாளர்களை தேடி வருவது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சிலைகளை வாங்குபவர்கள் போல் நடித்து வீரபத்திரன் இல்லத்திற்கு சென்று அங்கு ஒரு தனி அறையில் பதுக்கி வைத்திருந்த மூன்று சிலைகளுடன் கையும் களவுமாக வீரபத்திரனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சிலைகளுக்குண்டான ஆவணங்களை கேட்டப்போது, வீரபத்திரன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை கைது செய்து மூன்று சிலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மூன்று பழங்கால சிலைகளை போஸ் என்பவர் வீரபத்திரனிடம் கொடுத்து விற்பனை செய்து கொடுக்குமாறு தெரிவித்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து சிலைகளை, விற்பனை செய்ய கொடுத்த கறிகடை ஊழியர் போஸை மதுரையில் வைத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இந்த சிலைகள் எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது, சிலை கடத்தலில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in