மலேசியாவில் இருந்து சென்னைக்கு 740 கிராம் தங்கம் கடத்திய பெண்ணை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மலேசியாவில் இருந்து சென்னை வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெண் பயணி ஒருவர் அதிகாரிகளிடம் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்த அந்த பெண் பயணியை தனி அறையில் அதிகாரிகள் சோதனை செய்ததில் உள்ளாடையில் மறைத்து ரூ.36.20 லட்சம் மதிப்பிலான 740 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கத்தை அவர் கடத்தியுள்ளதை கண்டு பிடித்தனர். இதனைத் தொடர்ந்த கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பெண்ணைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.