சென்னை விமான நிலையத்தில் சிக்கிய அரியவகை உயிரினங்கள்: பாங்காங் பயணி கடத்தியது அம்பலம்

சென்னை விமான நிலையத்தில் சிக்கிய அரியவகை உயிரினங்கள்: பாங்காங் பயணி கடத்தியது அம்பலம்

பாங்காங்கில் இருந்து வந்த பயணியிடமிருந்து தென் ஆப்பிரிக்கா காடுகளில் வாழும் அரிய வகை குரங்குகள் 3, மத்திய ஆப்பிரிக்க காடுகளில் வாழும் அரிய வகை பாம்பு குட்டிகள் 45, அரிய வகை நட்சத்திர ஆமைகள் 2 கடத்தி வரப்பட்டது சென்னை விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு பாங்காங்கில் இருந்து பயணி ஒருவர் அரிய வகை உயிரினங்களைக் கடத்தி வந்துள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து, பாங்காங்கில் இருந்து சென்னை வந்த பயணிகளின் உடைமைகளைப் பரிசோதித்தனர்.

அப்போது அவரது 2 பெட்டிகளில் அரிய வகையான உயிரினங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். அவற்றில் தென் ஆப்பிரிக்கா காடுகளில் வாழும் அரிய வகை குரங்குகள் 3, மத்திய ஆப்பிரிக்க காடுகளில் வாழும் அரிய வகை பாம்பு குட்டிகள் 45, அரிய வகை நட்சத்திர ஆமைகள் 2 உள்ளிட்டவைகளை அந்த நபர் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உயிரினங்களின் தரம் மற்றும் எதற்காக இவை கடத்தப்பட்டன என்பவை குறித்து அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in