கோழித் தீவனத்திற்காக ஆலையில் பதுக்கப்பட்ட 13,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோழித் தீவனத்திற்காக  ஆலையில் பதுக்கப்பட்ட 13,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோழித் தீவன நிறுவனங்களுக்கு அனுப்ப தனியார் அரிசி ஆலையில் பதுக்கி வைத்த 13 ஆயிரத்து 600 கிலோ ரேஷன் அரிசியை ராமநாதபுரம் உணவுப் பொருட்கள் கடத்தல் குற்றப் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி- மூக்கையூர் சாலையில் உள்ள தனியார் அரிசி ஆலையில் உணவுப் பொருள் கடத்தல் குற்றப் புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ஆல்பின் பிரைட் மேரி தலைமையில் தலைமைக் காவலர்கள் குமாரசாமி, தேவேந்திரன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் இன்று சோதனை மேற்கொண்டனர். அங்கு, 40 கிலோ வீதம் 150 சாக்குகளில் நிரப்பிய தூளாக்கிய அரிசி 6 ஆயிரம் கிலோ அரிசி, 40 கிலோ வீதம் 190 சாக்கு மூட்டைகளில் இருந்த 7 ஆயிரத்து 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இந்த அரிசியை தூளாக்கி வெளி மாவட்டங்களுக்கு கோழித் தீவனமாக அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது தெரிந்தது. இது தொடர்பாக கடலாடி தாலுகா கொண்டு நல்லான் பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலமுருகன் (23), விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையைச் சேர்ந்த சங்கரன் மகன் மருது பாண்டி (23) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அரிசி ஆலை உரிமையாளர் மதுரை அவனியாபுரம் சுப்ரமணியனைத் தேடி வருகின்றனர்.

அப்போது அப்பகுதியை கடக்க முயன்ற ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தலா 30 வீதம் கிலோ 22 மூட்டைகளில் இருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ஆட்டோவை ஓட்டி வந்த கடலாடி அருகே புனவாசல் திருகண்ணன்( 60) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in