சென்னை விமான நிலையத்தில் 2 நாட்களில் 1.59 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில்  2 நாட்களில் 1.59 கோடி தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு திரும்பிய பயணிகளிடம் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சோதனையில் 1.59 கோடி மதிப்பிலான 3.14 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் கண்காணிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 நாட்களாக பல்வேறு நாடுகளில் இருந்து சென்னை திரும்பிய பயணிகளில் ஒரு சிலர் தங்கத்தை கடத்தியுள்ளது அம்பலமாகி உள்ளது.

துபாயில் இருந்து மஸ்கட் வழியாக சென்னை திரும்பிய இரண்டு நபர்கள் தங்களது கணினியில் 900 கிராம் மதிப்புள்ள 24 க்ரேண்ட் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதேபோல் சார்ஜா மற்றும் கொழும்புவில் இருந்து 766 கிராம், 837 கிராம் தங்கம் கடத்தி வந்த நான்கு பெண்களிடம் இருந்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தங்கத்தை கடத்திய நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் 1.59 கோடி மதிப்பிலான 3.14 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in