காசி தமிழ் சங்கமத்தில் சிவதாண்டவம்: தமிழகத்துக்கு சிறப்பு சேர்த்த சுபானு

சிவதாண்டவத்தில் சுபானு
சிவதாண்டவத்தில் சுபானு

காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெற்று காசி  தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் 108 முத்திரைகளைக் காட்டி சிவதாண்டவ நடனம் ஆடிய சீர்காழி மாணவியை  அங்கிருந்தவர்கள்  பாராட்டி சான்றிதழ்கள் வழங்கியுள்ளனர்.

மத்திய அரசின்  சார்பில் காசியில் தமிழ் சங்கமம் விழா கடந்த நவம்பர் 16-ம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் நடைபெற்றது. இதில்  தமிழ் இலக்கியம், கல்வி, மற்றும் தமிழ் கலாச்சாரம் ஆகியவற்ற விளக்கு வகையில் பல்வேறு தரப்பு நிறம் கலந்து கொண்டனர்.  பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான பழமையான தொடர்பைக் காட்டும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  சிறப்பு ரயில்கள் மூலம் தமிழகத்தில் இருந்து 2500 பிரதிநிதிகள் பங்கேற்றனர், இதில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த யோகா மாணவி  சுபானு கலந்து கொண்டார். காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 108 முத்திரைகளைக் காட்டி சிவதாண்டவம் நடன  ஆடினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் சிவ தாண்டவம் ஆடிய அவர் ஒவ்வொரு முத்திரையையும் வெகு அசத்தலாக செய்து காட்டியதைக் கண்டு அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்தால் உறைந்து போயினர். நாட்டியம் முடிந்ததும் அரங்கமே எழுந்து நின்று சுபானுவை வெகு நேரம் கைதட்டிப் பாராட்டியது.

சீர்காழியில் வரவேற்பு
சீர்காழியில் வரவேற்பு

அங்கிருந்த மத்திய அமைச்சர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் சிவதாண்டவம் ஆடிய சுபானுவை வெகுவாக பாராட்டினர். அவருக்கு மத்திய அரசின் சார்பில் சான்றிதழும் வழங்கப்பட்டது.  இந்த சுபானு ஏற்கெனவே பல நாடுகளில் நடைபெற்ற யோகாசன போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்களை வாங்கியுள்ளார்.  அவரது தாயும் யோகாசன போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து  சொந்த ஊரான சீர்காழிக்கு நேற்று வந்தடைந்த அவரை  சீர்காழி ரயில் நிலையத்தில் பொதுமக்கள்,  அவரது உறவினர்கள் மற்றும் சீர்காழி நகர பாஜகவினர்  உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in