பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ
பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோநெருக்கமாக வீடியோ எடுத்து பாலியல் மிரட்டல்; பிளேபாய் ஆன பாதிரியார்: வெளியான அதிர்ச்சி படங்கள்

நெருக்கமாக வீடியோ எடுத்து பாலியல் மிரட்டல்; பிளேபாய் ஆன பாதிரியார்: வெளியான அதிர்ச்சி படங்கள்

நாகர்கோவிலில் பல இளம்பெண்களை காதலிப்பது போல் ஏமாற்றி பாலியல் ரீதியான வீடியோக்கள் எடுத்துத் தொல்லை கொடுத்தவன் காசி. இப்போது சிறையில் உள்ளார். காசிக்கே சவால்விடும் வகையில் தான் பணிசெய்யும் சர்ச்சுக்கு வரும் பெண்களை மயக்கி சல்லாபத்தில் ஈடுபட்ட பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ(29). இவர் சீரோ மலபார் கத்தோலிக்கச் சபையில் பாதிரியாராக உள்ளார். தக்கலை அருகில் உள்ள பிலாங்காலை பகுதியில் உள்ள சீரோ மலபார் சபையின் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தார். கடந்த சில தினங்களாகவே குமரி மாவட்ட சோசியல் மீடியாக்களில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, இளம்பெண்களிடம் ஆபாச வீடியோ உரையாடல், சாட்டிங் செய்யும் குட்டி, குட்டி வீடியோக்களும், ஸ்கிரீன் ஷாட்களும் வைரலானது.

வரிசைகட்டிய புகார்கள்!

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தான் பணி செய்யும் இடங்களில் எல்லாம் சர்ச்சுக்கு வரும் இளம்பெண்களை, குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளை பிரார்த்தனையின் போது ஆறுதல் சொல்வது போல் தன் வலையில் வீழ்த்துவார். தொடர்ந்து அவர்களிடம் நெருக்கமாகப் பழகி, அதை வீடியோவாகவும், வாட்ஸ் அப் கால், ஸ்கிரீன்ஷாட்கள் எடுத்துவைத்துக்கொண்டு பாலியல் தொல்லை செய்து மிரட்டுவார். சிலர் ஒத்துழைப்பு கொடுத்ததால் அவரும் பிளேபாய் போல் அதைச் செய்துவந்தார்.

இவர் மீது குமரிமாவட்டம், ஆலந்தட்டுவிளையைச் சேர்ந்த மினி அஜிதா என்பவர், “தன்னுடன் படிக்கும் மாணவிக்கு பாதிரியார் ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பியதை என் மகன் தட்டிக்கேட்டார். இதனால் பாதிரியார் பொய் புகார் கொடுத்து என் மகன் கைது செய்யப்பட்டார். பாதிரியாரின் செல்போனை ஆய்வுசெய்ய வேண்டும் என எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதேபோல் எஸ்.பி அலுவலகத்தில் பெங்களூரூவில் நர்சிங் படிக்கும் குமரி மாணவி ஒருவரும் பாதிரியார் மீது பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கொடுத்தார்.

இதனிடையே பத்துக்கும் அதிகமான பெண்களுடன் பாதிரியார் மிக, மிக நெருக்கமாகவும், ஆபாசமாகவும் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடுத்தடுத்து சமூகவலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து குமரிமாவட்ட சைபர் க்ரைம் போலீஸார், “பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தன் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பது தெரிந்ததும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in