செகந்திராபாத் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் நாளை இயக்கம்: பட்டுக்கோட்டை வழியாகச் செல்லும்! 

செகந்திராபாத் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் நாளை இயக்கம்: பட்டுக்கோட்டை வழியாகச் செல்லும்! 

செகந்திராபாத் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் நாளை இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது.

செகந்திராபாத் - ராமநாதபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்க தென் மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி செகந்திராபாத்- ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (07695) நாளை (ஜன. 4) முதல் ஜன. 25 வரை புதன்கிழமை தோறும் இரவு 9:10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10:30 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07696) ஜன. 6 முதல் ஜன. 27 வரை வெள்ளிக்கிழமை தோறும் ராமநாதபுரத்தில் இருந்து காலை 9:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12:50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

இந்த ரயில்கள் நலகொண்டா, மிரியால்குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, கவளி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி 3 பெட்டி, குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி 2 பெட்டி, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி 10 பெட்டி, இரண்டாம் வகுப்பு பொது பெட்டி 4, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளுடன் 2 பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (ஜன.4) காலை 8 மணிக்கு துவங்குகிறது என தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in