ஆந்திராவில் இருந்து சென்னை வந்த ரயிலில் சோதனை: கருவாட்டு வியாபாரியிடம் சிக்கிய 78 .75 லட்ச ரூபாய் ஹவாலாவா?

ஆந்திராவில் இருந்து சென்னை வந்த ரயிலில் சோதனை: கருவாட்டு வியாபாரியிடம் சிக்கிய 78 .75 லட்ச ரூபாய் ஹவாலாவா?

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து இன்று மதியம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அப்போது பயணிகளின் உடமைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பயணி ஒருவரது பையில் கட்டு கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார், அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுரளி (53) என்பதும், கருவாடு வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், அவர் கொண்டு வந்த 78.75 லட்சம் ரூபாய்க்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அது ஹவாலா பணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும், பிடிபட்ட நபரையும் அவர்களிடம் ஒப்படைக்க உள்ளனர். கடந்த ஓரு வாரத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1 கோடியே 85 லட்சம் ரூபாயும், எழும்பூர் ரயில் நிலையத்தில் 40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ரயில்வே டிஎஸ்பி ராஜூ கூறுகையில், “ தொழில் ரீதியாக பணம் கொண்டு வருபவர்கள் அந்த பணத்திற்குரிய ஆவணங்களை தங்களிடம் வைத்திருக்க வேண்டியது அவசியம். உரிய ஆவணங்கள் இல்லாத பணம் எவ்வளவு மதிப்பாக இருந்தாலும் அது ஹவாலா பணம் என்ற அடிப்படையில் பறிமுதல் செய்த பின் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். ரயில் நிலையங்களில் ஹவாலா வேட்டை தொடரும்” என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in