காஷ்மீரில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை; லஷ்கர் தளபதி உட்பட 3 பேர் சுட்டுக் கொலை!

தீவிரவாதிகள் - சித்தரிப்பு படம்
தீவிரவாதிகள் - சித்தரிப்பு படம்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை தேடும் பணி கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில் நேற்று நடந்த தேடுதல் வேட்டையின் போது லஷ்கர் தளபதி உட்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள கடோல் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த மோதலில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி உசைர்கான் கொல்லப்பட்டார். மேலும் 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுட்ட்க்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in