கழிவுநீர் கலந்ததால் நிறம் மாறிய ஓடை: தூத்துக்குடியில் 3 தொழிற்சாலைகளுக்கு சீல்

தூத்துக்குடி கடலில் கழிவு நீர் கலப்பு
தூத்துக்குடி கடலில் கழிவு நீர் கலப்புகழிவுநீர் கலந்ததால் நிறம் மாறிய ஓடை: தூத்துக்குடியில் 3 தொழிற்சாலைகளுக்கு சீல்

தூத்துக்குடியில் கடலுக்குச் செல்லும் ஓடையில் கழிவுநீரை செலுத்தியதாக மூன்று மீன் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.

தூத்துக்குடி கோமஸ்புரம் பகுதியில் உப்பாற்று ஓடை உள்ளது. இங்கு கடந்த சிலநாள்களுக்கு முன்பு ரசாயனக் கலவை கொட்டப்பட்டதால் இந்த ஓடையின் பல பகுதிகள் இளஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதனால் உப்பாற்று ஓடையைப் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எம்.பி கனிமொழி ஆகியோரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையைக் கடந்து கோமஸ்புரம், தருவைகுளம் வழியாகச் செல்லும் உப்பாற்று ஓடையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டிய மூன்று மீன்பதனிடும் தொழிற்சாலைகளுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர். கூடவே அந்த மூன்று மின்பிடித் தொழிற்சாலைகளுக்கும் உள்ள மின்சார இணைப்பையும் அதிகாரிகள் துண்டித்தனர். மேலும், உப்பாற்று ஓடையில் தொடர்ந்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in