சென்னை பாரிமுனையில் 256 கடைகளுக்கு சீல்: மாநகராட்சியின் அதிரடிக்கு இது தான் காரணமா?

சென்னை பாரிமுனையில் 256 கடைகளுக்கு சீல்: மாநகராட்சியின் அதிரடிக்கு இது தான் காரணமா?

சென்னை பாரிமுனை பகுதியில் 60 லட்ச ரூபாய் வாடகை பாக்கி செலுத்தாத 256 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாரிமுனை வடக்கு கோட்டை சாலை ராஜா அண்ணாமலை மன்றம் எதிரே மாநகராட்சி சார்பில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இங்கு எலக்ட்ரானிக், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் அனைத்து விதமான வெளிநாட்டுப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி 5-வது மண்டலத்திற்கு உட்பட் பகுதியான இங்கு 256 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கு மாதம் தோறும் மாநகராட்சிக்கு வாடகை செலுத்த வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக வியாபாரிகள் 256 கடைகளுக்கு வாடகை செலுத்தாமல் சுமார் 60 லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் பலமுறை கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தும், எச்சரிக்கை செய்தும் வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மாநகராட்சி 5-வது மண்டல உதவி வருவாய் அலுவலர் நீதிபதி ரங்கநாதன் தலைமையில் வரி மதிப்பீட்டாளர் ஆகியோர் குழுக்களாக பிரிக்கப்பட்டு இன்று அதிகாலை எஸ்பினேடு போலீஸார் உதவியுடன் 256 கடைகளுக்கும் அதிரடியாக சீல் வைத்தனர். எந்த அசம்பாவிதம் ஏற்படாத வகையில் உதவி ஆணையர், ஆய்வாளர்கள், காவலர்கள், என 70-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in