விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்ததை அடுத்து இன்று(ஜன.2) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்ததை  முன்னிட்டு டிச.24-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. டிச.25 கிறிஸ்துமஸ்,  ஜன.1 ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறைகள் முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. 

அதிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இன்று  பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெறுகின்றன. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி வகுப்புகள்  நடைபெற இருப்பதால், அந்த வகுப்புகளுக்கு ஜன.5-ம் தேதியன்று வகுப்புகள் தொடங்குகின்றன. இதனால் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in