மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கத்தால் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. அதனால்  நேற்று முதல் பெரும்பாலான மாவட்டங்களில் பெருமழை கொட்டித் தீர்க்கிறது.  கனமழையால் தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர்,  ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை  கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.  சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர்,  நாகை,  மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை தொடர்வதால் அந்தந்த மாவட்டங்களின் நிர்வாகம் சார்பில் இன்று  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  தஞ்சாவூர், திருவாரூர்,  நாகை, மயிலாடுதுறை ஆகிய எட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவமழை தனது  தீவிரத் தன்மையை காட்ட ஆரம்பித்திருப்பதால் அந்த மழை  பெறும் மாவட்டங்களில் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் 14 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு  லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையத்தால்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in