மிரட்டும் கனமழை: இன்றும் 28 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மிரட்டும் கனமழை: இன்றும் 28 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் இடைவிடாமல் தொடரும் கனமழையால் தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில்  உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கரையை நேற்று இரவு நெருங்கியது.  அதையடுத்து கடந்த இரண்டு தினங்களாக  தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கன முதல் அதிக கன மழை வரை பெய்தது. 

அதன் காரணமாக நேற்று 28 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.  இன்றும் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் 28 மாவட்டங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், மயிலாடுதுறை, நீலகிரி, திருவாரூர்,  தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தருமபுரி, திருவண்ணாமலை, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 28 மாவட்டங்களிலும்  மற்றும் புதுவை, காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த விடுப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in