
கனமழை காரணமாக திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை விலக உள்ள நிலையில், தமிழகத்தில் அந்த மழை தீவிரமடைந்து மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் விடாமல் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல தொடர் கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.