கும்பலாக அமர்ந்து கஞ்சா அடிக்கும் பள்ளி மாணவர்கள்: பதற வைக்கும் வீடியோ

கும்பலாக அமர்ந்து கஞ்சா அடிக்கும் பள்ளி மாணவர்கள்: பதற வைக்கும் வீடியோ

செங்கத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா புகைப்பது போல வெளியான வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக ஏற்கெனவே பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் சிலர், கஞ்சா பயன்படுத்துவது போல வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள மேல்செங்கம், அன்வராபாத், செ.நாச்சிப்பட்டு, சாத்தனூர், இறையூர், மேல்புழுதியூர், செங்கம் தளவாநாயக்கன்பேட்டை, பரமனந்தல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக கூறப்படுகிறது. போலீஸார் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என , பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in