வீட்டிற்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொலை செய்த மாணவன்: தகாத உறவால் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கொலை
கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஆசிரியையை கொலை செய்த பள்ளி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மாணவன், கொல்லப்பட்ட ஆசிரியையுடன் தகாத உறவில் இருந்ததாகவும், அது வெளிப்படுமோ என்ற பயத்தில் இந்த கொலை நடந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும், அவனது வகுப்பு ஆசிரியைக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியையின் வீட்டிற்குள் புகுந்த மாணவன், அவரை கத்தியால் சரமாரியாக குத்தி நேற்று முன் தினம் கொலை செய்தார்.இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாணவனை பதுங்கியிருந்த மாணவனை நேற்று கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அயோத்தி டிஐஜி ஏபி சிங், "12-ம் வகுப்பு படிக்கும் மாணவன், தன் ஆசிரியையைக் கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளில் காணப்பட்ட அவருடைய டி-சர்ட் மூலமாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். கைதான மாணவன், கொல்லப்பட்ட ஆசிரியையுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இது வெளிப்பட்டு விடுமோ என பயந்து அந்த உறவில் இருந்து அம்மாணவன் வெளியேற விரும்பினார். ஆனால் ஆசிரியை அவரைப் பற்றி அவதூறான தகவல்களை வெளியிட்டு மிரட்டியதால் இந்த கொலை நடந்துள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது"என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in