பள்ளி சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் சீண்டல்: நர்சரி பள்ளி தாளாளர் போக்சோவில் கைது

ராஜமாணிக்கம்
ராஜமாணிக்கம்

கள்ளக்குறிச்சி அருகே  தனியார் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளியின் உரிமையாளரை கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார்  கைது செய்துள்ளனர். 

கள்ளக்குறிச்சியை அடுத்த பசுங்காயமங்கலத்தில் ஸ்ரீ கிருஷ்ணபெருமாள் நர்சரி மற்றும் பிரைமரி தனியார் பள்ளியை ஓய்வுபெற்ற தலைமையாசிரியாரான ராஜமாணிக்கம் நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை நடத்தப்படும் இப்பள்ளியில் மாணவிகளிடம்,  பள்ளியின் உரிமையாளரும், தாளாளருமான  ராஜமாணிக்கம் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். அப்போது,  பள்ளி நிர்வாகத்திற்கும், பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர் தரப்பில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

பின்னர் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில்  ராஜாமாணிக்கத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து  போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிச் சிறுமிகளிடம் பள்ளியின் தாளாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in