கள்ளச்சாராயம் குடித்த பள்ளி முதல்வர் உட்பட 3 பேர் பலி: பிஹாரில் தொடரும் சோகம்

கள்ளச்சாராயம் குடித்த பள்ளி முதல்வர் உட்பட 3 பேர் பலி: பிஹாரில் தொடரும் சோகம்

பிஹார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த பள்ளி முதல்வர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

பிஹாரின் வைஷாலி மாவட்டத்தில் மூன்று பேர் மது அருந்தியதால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இறந்தவர்களில் வைஷாலியின் மெஹ்னாரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் முதல்வரும் அடங்குவார். பிஹார் மாநிலத்தில் 2016 முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது.

பார்ட்டியின் போது கள்ளச்சாராயம் அருந்தியதால் பள்ளியின் முதல்வர் ஜெய் பிரதான் நேவாட் உயிரிழந்ததாக அந்த தனியார் பள்ளியின் இயக்குநர் தெரிவித்துள்ளார். மெஹ்னாரில் நடந்த இருவேறு சம்பவங்களில், ஒரு திருமணத்தில் மது அருந்தியதால் ராகுல் உயிரிழந்தார், அதேபோல அனில் என்பவரும் கள்ளச்சாராயத்தால் பலியானார்.

மரணத்திற்கான காரணத்தை ஆய்வு செய்ய பிரேத பரிசோதனைக்காக மருத்துவ குழுவை போலீசார் மற்றும் அதிகாரிகள் அமைத்துள்ளனர். மேலும், மது அருந்துவதால் ஏற்படும் மரணம் மற்றும் நோய் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முன்னதாக, வியாழனன்று பாட்னாவின் பாலிகஞ்ச் பகுதியில் உள்ள கலால் காவல் நிலையத்திற்குள் மது அருந்திக்கொண்டிருந்த 5 கைதிகள் மற்றும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in