கோவில்பட்டியில் பள்ளி கழிப்பறையில் இறந்துகிடந்த 12-ம் வகுப்பு மாணவி: சிக்கியது கடிதம்

கோவில்பட்டியில் பள்ளி கழிப்பறையில் இறந்துகிடந்த 12-ம் வகுப்பு மாணவி: சிக்கியது கடிதம்

கோவில்பட்டியில் தனியார் மேல்நிலைப்பள்ளி கழிவறையில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை பகுதியில் முத்துக்கருப்பன் என்னும் பெயரில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவரது மகள் வைத்தீஸ்வரி(17) என்னும் மாணவி பள்ளி விடுதியில் தங்கி இருந்து பிளஸ் டூ படித்துவந்தார். இவர் பள்ளிக் கழிவறையில் நேற்று இரவு திடீரென சென்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பசுவந்தனை போலீஸார் மாணவி வைத்தீஸ்வரி உடலைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

காரணம் என்ன?

ராமநாதபுரம் மாவட்டத்தில் வைத்தீஸ்வரியின் சித்தி கடந்தவாரம் உயிர் இழந்தார். அந்த துக்க நிகழ்வுக்கு சென்று திரும்பியவர் அதன் பின்னர் சோகமாக, யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். அதன்பின்பு சக மாணவிகளிடம் பேசும்போதும் மனம் உடைந்து காணப்பட்ட வைத்தீஸ்வரி, உடல்நலமின்மையாலும் தவித்திருக்கிறார். இதெல்லாம் சேர்ந்து ஏற்படுத்திய மன உளைச்சலில் அவர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே உயிரிழந்த மாணவி வைத்தீஸ்வரியின் அறையில் இருந்து கடிதம் ஒன்று கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. அதுகுறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in