தென் மாவட்டங்களில் அதிகரித்து வரும் வழக்குகள்: சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

தென் மாவட்டங்களில் அதிகரித்து வரும் வழக்குகள்: சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

செங்கோட்டையில் பள்ளிச் சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தென்மாவட்டங்களில் சிறுமிகளிடம் அத்துமீறல் செய்வதாக அதிக அளவில் வழக்குகள் பதிவாகி வருவது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செங்கோட்டையை அடுத்த தெற்குமேடு ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் பிச்சையா. இவருக்கு ராஜ்குமார்(28) என்ற மகன் உள்ளார். இவர் வீடுகளில் எலெக்ட்ரீசியன் வேலைசெய்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி அழுதுகொண்டே தன் பெற்றோரிடம் சொல்ல அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் மூலம், தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. அவர்கள் இதுகுறித்து செங்கோட்டை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் செங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து ராஜ்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

அண்மைக்காலமாக தென் மாவட்டங்களில் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதும், அதுதொடர்பான வழக்குகள் பதியப்படுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனிடையே அனைத்துப் பள்ளிகளிலும் குட் டச், பேட் டச் குறித்து குழந்தைகள், சிறுவர், சிறுமிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in