வீட்டில் யாரும் இல்லாதபோது பாலியல் டார்ச்சர்; பெற்றோரிடம் கதறிய மாணவி: போக்சோவில் சிக்கிய‌ உறவுக்காரர்

வீட்டில் யாரும் இல்லாதபோது பாலியல் டார்ச்சர்; பெற்றோரிடம் கதறிய மாணவி: போக்சோவில் சிக்கிய‌ உறவுக்காரர்

பத்தாம் வகுப்பு மாணவியைத் தொடர்ந்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த உறவுக்கார வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் நல்லமுத்து(37). கட்டிடத் தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் இவரது உறவுக்கார சிறுமி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். கடந்த சில மாதங்களாகவே நல்லமுத்து வேலைக்குச் செல்லாமல் வீட்டில் யாரும் இல்லாதபோது உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் மிரட்டி உள்ளார். ஒருகட்டத்தில் நல்லமுத்துவின் தொந்தரவு மிதமிஞ்சிச் செல்லவே இதுகுறித்து அந்த மாணவி, தன் பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நல்லமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in