லிப்ட் கொடுப்பதாக சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்று பலாத்காரம்: கட்டிடத் தொழிலாளி கைது

சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைதுலிப்ட் கொடுப்பதாக சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்று பலாத்காரம்: கட்டிடத் தொழிலாளி கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பிய மாணவியை வீட்டில் விடுவதாக அழைத்துச் சென்று வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளிக்கூடம் முடிந்து மாலையில் நடந்து வீட்டிற்குச் சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக டூவிலரில் வந்த சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன்(30) என்பவர் சிறுமியிடம் தன்னுடன் பைக்கில் ஏறும்மாறும், தான் வீட்டில் விடுவதாகவும் அழைத்துள்ளார். சிறுமியும் வீட்டில் விடுவதாகச் சொன்னதால் பைக்கில் ஏறினார்.

ஆனால், ஜான்சன் அவரை வீட்டில் விடாமல் நேரே ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துப்போய் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அங்கிருந்து தப்பி ஓடிவந்த சிறுமி இதுகுறித்துத் தன் பெற்றோரிடம் சொல்லி அழுதார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் ஜான்சனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கட்டிடத் தொழிலாளியான ஜான்சனுக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்து, நான்கு வயதில் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in