இந்த வேலைகளை மாணவர்கள் இனி செய்யக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

இந்த வேலைகளை மாணவர்கள் இனி செய்யக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

பள்ளிகளில் தூய்மைப் பணிகளில் மாணவர்களை எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவர்களை வைத்து பள்ளி வளாகங்களில் சுத்தப்படுத்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வந்திருக்கிறது. அவ்வப்போது இதுகுறித்து சர்ச்சைகள் எழுந்தாலும், மாணவர்கள் பள்ளிகளில் தங்கள் வகுப்பறைகளைத் தூய்மை செய்யும் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதனால் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் அதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பள்ளி வளாகம், வகுப்பறை என மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியைத் தூய்மை செய்துவரும் நிலையில் அதற்குத் தடை விதிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், "பள்ளிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் எக்காரணம் கொண்டும் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது. பள்ளிகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களை ஈடுபடுத்தலாம். மேலும் மாணவர்களைத் தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in