`மாணவர்களின் பாதுகாப்பிற்குப் நீங்களே முழுப்பொறுப்பு'- தனியார் பள்ளிகளுக்கு `செக்' வைத்தது தமிழக அரசு

`மாணவர்களின் பாதுகாப்பிற்குப் நீங்களே முழுப்பொறுப்பு'- தனியார் பள்ளிகளுக்கு `செக்' வைத்தது தமிழக அரசு

பள்ளி வளாகத்தினுள் குழந்தைகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் எனத் தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததைத் தொடர்ந்து அந்த பள்ளியில் வன்முறை வெடித்தது. அப்போது பள்ளி சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. மேலும் மாணவர்களின் சான்றிதழ்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள், பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குப் பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்காது எனப் பெற்றோர்களிடம் படிவம் பெற்றது. இந்த படிவம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில், பள்ளி நேரத்தில் பள்ளி வளாகத்தினுள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்குப் பள்ளி நிர்வாகமே முழு பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில், ‘கள்ளக்குறிச்சி சம்பவத்திற்குப் பின் சில தனியார் பள்ளிகள் உறுதிமொழி பத்திரத்தில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்றதாகப் புகார் எழுந்துள்ளது. ஆனால் பெற்றோர்கள் தரப்பில் எங்களுக்கு எவ்வித புகார்களும் வரவில்லை. ஆனாலும் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவாகச் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறோம்’ என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in