கொளுத்தும் கோடைவெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா?: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பள்ளிகள் திறப்பு
பள்ளிகள் திறப்புகொளுத்தும் கோடைவெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா?: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்து கடந்த ஒருமாத காலமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு கோடை மிகக் கடுமையாக உள்ளது. தினமும் 15 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.

இதனால் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜூன் 10-ம் தேதிக்கு மேல் பள்ளிகளைத் திறக்கலாம் என்பதாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் திட்டமிட்டபடி அதாவது முன்னரே அறிவித்தபடி  ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும்,   பள்ளிகள் திறப்பு தள்ளிப் போக வாய்ப்பில்லை என்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் தொடங்கப்படும். ஜூன் 5-ம் தேதி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புக்கள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கோடை வெயில் காரணமாக பள்ளி திறப்பு தள்ளிப்போகும் என எதிர்பார்த்த  நிலையில் திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 1 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் மாணவர்களும், பெற்றோர்களும் சிறிது  ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in