பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு: முன் கூட்டியே வெளியான அறிவிப்பால் மாணவர்கள் குஷி!

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு: முன் கூட்டியே வெளியான அறிவிப்பால் மாணவர்கள் குஷி!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குக் கனமழை காரணமாக நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவாகி உள்ளது. அதன் காரணமாகத் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்குக் கனமழை முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்த கனமழை எச்சரிக்கை காரணமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி. கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுமுறை அளித்துள்ளார்.

இது குறித்து வெளியான மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில், நாளை கனமழை பெய்ய இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர்நிலைப் பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மாணவர்களை வகுப்பறைக்கு வரவழைத்தால் அந்த கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in