தொடரும் கனமழை: மேலும் 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

தொடரும் கனமழை: மேலும் 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் நாளை (11.11.2022) கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாகத் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்குக் கனமழை முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்த கனமழை எச்சரிக்கை காரணமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். மேலும் மழைக்காலங்களில் சிறப்பு வகுப்புகள் என மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in