ஆன்லைனில் வேலை தேடுபவர்களைக் குறிவைத்து மோசடி: 50 பேரை ஏமாற்றிய வாலிபர் கைது

வேலை தேடுபவர்களை குறிவைத்து மோசடி
வேலை தேடுபவர்களை குறிவைத்து மோசடிஆன்லைனில் வேலை தேடுபவர்களைக் குறிவைத்து மோசடி: 50 பேரை ஏமாற்றிய வாலிபர் கைது

பிரபல நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி கடந்த 8 மாதங்களில் 50 பேரை ஏமாற்றிய வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர் சச்சின் டாக்கா(31). இவர் தன்னை ஒரு பிரபல நிறுவனத்தின் இயக்குநராகக் காட்டிக் கொண்டு ஆன்லைனில் வேலை தேடுபவர்களைத் தொடர்பு கொண்டுள்ளார். அவர்களுக்கு வேலைதருவதாக நேர்காணல் நடத்தியுள்ளார். இதனை நம்பி பலர் இவரிடம் விண்ணப்பங்களை அனுப்பி நேர்காணலுக்குச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், சுபாஷ் பிளேஸ் என்எஸ்பி வளாகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் பொதுமேலாளர் கொடுத்த புகாரின் பேரில் சச்சின் டாக்காவை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்திய போது, சமூக ஊடகங்களில் வேலை தேடுபவர்களின் விவரங்களைப் பெறுவதோடு, நிறுவனத்தின் இயக்குநராக ஆள்மாறாட்டம் செய்து அவர்களைத் தொடர்பு கொண்டு அவர் ஏமாற்றியதும் தெரிய வந்தது. அத்துடன் பிரபல நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி கடந்த 8 மாதங்களில் 50-க்கும் மேற்பட்டோரை அவர் ஏமாற்றியுள்ளார்.

நேர்காணலுக்கு வரும் அப்பாவி இளைஞர்களிடம் சான்றிதழ் சரிபார்ப்பு கட்டணம், கோப்பு செயலாக்கக் கட்டணம், பாதுகாப்பு வைப்புத்தொகை என பல லட்ச ரூபாயை அவர் மோசடி செய்து அதை ஆடம்பரமாக செலவு செய்துள்ளார். அவரிடமிருந்து போலி அடையாள அட்டைகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவருடன் இந்த மோசடியில் வேறு யாரும் ஈடுபட்டுள்ளனரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in