ஓஎல்எக்ஸ் விளம்பரம் மூலம் பணமோசடி: சென்னை வாலிபர் கைது

ஓஎல்எக்ஸ் விளம்பரம் மூலம் பணமோசடி: சென்னை வாலிபர் கைது

பழைய பொருள்களை விற்பனை செய்யும் ஓஎல்எக்ஸ் இணையதளம் மூலம் கணினி உதிரிபாகங்களை விற்பனை செய்வதாகச் சொல்லி பணமோசடி செய்த வாலிபரை சைபர் கிரைம் போலீஸார் கைதுசெய்தனர்.

குமரி மாவட்டம், செம்பொன்விளையைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் ஓஎல்எஸ்சில் கணினி உதிரிபாகங்களை ஒருவர் விற்பனைக்கு இருப்பதாக வெளியிட்ட தகவலைப் பார்த்தார். புவனேஷ் என்பவர் அந்த விளம்பரத்தை வெளியிட்டு இருந்தார். அவரை ஆனந்த் தொடர்பு கொண்டார். அப்போது தன்னிடம் இருக்கும் உதிரி பாகங்களுக்கு 14 லட்ச ரூபாய் வழங்கக் கேட்டார். இதனைத் தொடர்ந்து ஆனந்தும், பல்வேறு தவணைகளாக 14 லட்ச ரூபாய் பணத்தை புவனேஷின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.

ஆனால் ஆனந்த், அந்தப் பணத்திற்கு தகுந்த கணினி உதிரிபாகங்களை அனுப்பாமல் ஒரு லட்ச ரூபாய்க்கான உதிரிபாகங்களை மட்டுமே அனுப்பியுள்ளார். ஆனந்த் தொடர்ந்து பணத்தைத் திருப்பிக் கேட்கவே 7 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மட்டும் திருப்பி அனுப்பினார். மீதிப்பணத்தைத் தராமல் புவனேஷ் இழுத்தடித்துள்ளார். இதுதொடர்பாக குமரிமாவட்ட சைபர் க்ரைம் போலீஸாரில் ஆனந்த் புகார்கொடுத்தார். இதையடுத்து சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த புவனேஷை(21)போலீஸார் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in