காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் மெத்தனம்... உத்தராகண்ட் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

உத்தராகண்ட் காட்டுத் தீ
உத்தராகண்ட் காட்டுத் தீ

உத்தராகண்ட் மாநில அரசு காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் மெத்தனமாக செயல்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் அம்மாநில தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

கோடைக்காலம் துவக்கத்திலிருந்து உத்தராகண்ட் மாநிலத்தில் காட்டுத்தீ பரவி பெரும் சேதத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அம்மாநில வனத் துறை தலைமை அதிகாரி தனஞ்சய் மோகன் கடந்த 9ம் தேதி கூறுகையில், காட்டுத் தீ காரணமாக மாநிலத்தில் 1,300 ஹெக்டேர் வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது, 5 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.

இந்நிலையில், உத்தராகண்ட் காட்டுத் தீ விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், எஸ்.வி.என்.பட்டி, சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

அப்போது நீதிபதிகள் உத்தராகண்ட் அரசு மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் மெத்தனமாக இருந்த உத்தராகண்ட் மாநில தலைமைச் செயலாளர் வரும் 17ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்.

தேர்தல் பணிக்காக வனத்துறை அதிகாரிகள் அல்லது வனத்துறை வாகனங்களை எந்த மாநிலமும் பயன்படுத்தக் கூடாது. உத்தராகண்ட் மாநிலத்துக்கு கடந்த ஆண்டு மத்திய அரசு வழங்கிய ரூ.9 கோடியில், காட்டுத் தீயைத் தடுக்க ரூ.3.14 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. தீயை அணைக்க மத்திய நிதி ஏன் பயன்படுத்தப்படவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி

வனத்துறையில் ஏன் அதிக அளவில் காலி பணியிடங்கள் உள்ளன. தீயணைப்பு கருவிகள் பற்றாக்குறை, தேர்தல் கமிஷன் விதிவிலக்கு அளித்தும் வனத்துறை அதிகாரிகளை பணியமர்த்தியது போன்ற பல்வேறு விவகாரம் தொடர்பாக அம்மாநில தலைமை செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும்" இவ்வாறு நீதிபதிகள் விசாரணையின்போது தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

தேர்வு எழுத அனுமதி மறுப்பு... ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவர் தற்கொலை!

பாடகி சுசித்ராவுக்கு முன்னாள் கணவர் கொடுத்த ரியாக்‌ஷன்... வைரலாகும் வீடியோ!

ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்... ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!

ஷாக்... இந்து இளைஞரை திருமணம் செய்த முஸ்லிம் பெண் மீது கொலைவெறி தாக்குதல்!

டெல்லி, ராஜஸ்தானைத் தொடர்ந்து கான்பூரிலும் அதிர்ச்சி... 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in