
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளுக்கு பொதுவிடுமுறை அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் இன்று( நவ.14) விசாரணைக்கு வந்தது. அவர் சார்பில் ஆஜ்ரான ஜெயா சுகின் என்ற வழக்கறிஞர், ’சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிக்கவும், அவருக்கு நினைவிடம் நிர்மாணிக்கவும் நீதிமன்றம் உத்தரவிடக்’ கோரினார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘சுபாஷ் சந்திரபோஸ் தேசத்துக்கு நல்கியவற்றை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில் நாம் இன்னும் கடினமாக உழைத்தாக வேண்டும். இருக்கும் விடுமுறைகளில் மேலும் ஒன்றை சேர்க்க வேண்டாமே’ என்றார். மேலும் விடுமுறை அறிவிப்பு போன்றவற்றை தீர்மானிப்பது நீதிமன்ற வரம்பில் வராது. அவை தொடர்பான அரசின் நிர்வாக முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது’ என்ற நீதிபதி, ’இது போன்ற வழக்குகள் பொதுநல மனுக்களின் நோக்கத்தையும், நீதிமன்றத்தின் நேரத்தையும் வீணடிக்கின்றன’ என குட்டு வைத்தார்.
சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் ஜன.23 அன்று அனுசரிக்கப்படுகிறது.