உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

வாக்குப்பதிவு சதவீதத்தை உடனுக்குடன் வெளியிடக் கோரிய வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

Published on

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீத விவரங்களை உடனடியாக வெளியிட கோரிய வழக்கில், தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

மக்களவைத் தேர்தலின் ஒவ்வொரு கட்டத்திலும், வாக்குப்பதிவு முடிந்த 48 மணி நேரத்துக்குள் வாக்குச் சாவடி வாரியாக, வாக்காளர் வாக்குப்பதிவு தரவுகளை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தன்னார்வ தொண்டு நிறுவனமான 'ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்' (ஏடிஆர்) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை, கடந்த 17ம் தேதி அன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

தேர்தல்  வாக்குப்பதிவு
தேர்தல் வாக்குப்பதிவு

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் தீபங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “முதல் கட்ட விசாரணையில் இந்த வழக்கில் எந்த நிவாரணமும் வழங்க நாங்கள் விரும்பவில்லை.

இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்குவது, கடந்த 2019ல் தாக்கல் செய்யப்பட்ட இதேபோன்ற மனுவின் மீது இறுதி நிவாரணம் வழங்குவதாகும். ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து இரண்டு கட்ட தேர்தல்களே மீதமுள்ளன. எனவே, தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கை உரிய அமர்வுக்குப் பட்டியலிடுகிறோம்.” என்றனர்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

'ஏடிஆர்' கடந்த 2019ல் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் இடைக்கால மனுவில், 'அனைத்து வாக்குச் சாவடிகளின் 'படிவம் 17 சி பகுதி-I’ (பதிவான வாக்குகளின் எண்ணிக்கை)-ன் ஸ்கேன் செய்யப்பட்ட தெளிவான நகல்களை தேர்தலுக்குப் பிறகு உடனடியாக பதிவேற்ற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில் தற்போதைய மக்களவைத் தேர்தலின்போதும் அதே கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்ற இந்திய குறும்படம்... ரசிகர்கள் வாழ்த்து!

வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி; முன்னாள் பாஜக நிர்வாகி கைது!

அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து எரிவாயு கசிவு; 89 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கட்டுக்கட்டாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்... அதிமுக பிரமுகர் கைது!

ப்ரேக்-அப்... அடுத்த ரிலேஷன்ஷிப்பிற்கு ரெடி... மெளனம் கலைத்த ஸ்ருதிஹாசன்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in